இரு கட்ட தடுப்பூசிகளைப் பெற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை வர அனுமதி

Sunday, 04 April 2021 - 15:19

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலையில், சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு அமைய தொற்றிற்கான இரு கட்ட தடுப்பூசியினை பெற்ற சுற்றுலா பயணிகள் தற்போது இலங்கை வரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வருபவர்கள் மேலதிக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வருகை தருபவர்கள் பீ.சி.ஆர். பரிசோதனைக்கு மட்டுமே உட்படுத்தப்படுவர்.

பரிசோதனையின் பின்னர் அவர்கள் இலங்கையின் எந்த பகுதிக்கும் தமது பயணத்தை தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நடைமுறை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் பொருந்தும் என இலங்கை சுற்றுலாத்துறை தலைவர் கிமாலி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இரண்டாவது தடுப்பூசியினை பெற்றவர்களின் ஊடாக தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அரிது என மருத்துவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மிக விரைவில் சுற்றுலாத்துறையினை படிப்படியாக பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியும் எனவும் இலங்கை சுற்றுலாத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.