உலகளாவிய ரீதியில் 3 கோடிக்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி!

Sunday, 04 April 2021 - 15:24

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+3+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%21
உலகளாவிய ரீதியாக 3 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்க ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் சீனாவில் ஆரம்பமான தொற்று, சர்வதேச ரீதியாக பரவி 9 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொற்று மீள ஐரோப்பிய நகரங்களை தாக்கும் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

குளிர்காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் பல வட அரைக்கோள் நாடுகளில் தொற்றின் இரண்டாவது அலை தாக்குவதற்கான ஏதுநிலை உள்ளதாக என அமெரிக்க ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிற்கு வெளியே நாடளாவிய ரீதியாக இஸ்ரேல் இரண்டாவது முடக்கத்தை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.