சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்!

Sunday, 04 April 2021 - 20:28

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய வர்த்தக மாவட்டமான கொழும்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நன்மை பெறமுடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு கோட்டையிலுள்ள வெளிவிவகார அமைச்சு, காவல்துறை தலைமையகம் போன்றவற்றை வேறு பகுதிகளுக்கு மாற்றுவதன் மூலம் பிரதேசத்தின் நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உத்தேச கொழும்பு துறைமுக நகரத்தை புதிய நகரமாக்க முடியும் என நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு கொழும்பு நகரம் துரிதகதியில் அபிவிருத்தியடைந்து வரும் நகரமாக தெரிவானது.

அதேபோன்று தொடர்ந்தும் பாரம்பரியத்துடனான நகரமாக கொழும்பினை மாற்றும் செயற்பாட்டினை நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.