பாகிஸ்தான் அணிக்கு 342 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Sunday, 04 April 2021 - 20:39

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++342+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

ஜொகன்னஸ்பர்க்கில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 341 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில்  டெம்பா பவுமா அதிகூடுதலாக 92 ஓட்டங்களையும் குயின்டன் டீ கொக் 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி சற்று முன்னர் வரை 36 ஓவர்கள் நிறைவில் 197 ஓட்டங்களை பெற்றுள்ளது.