இந்தியாவில் கொவிட்-19 பரவல் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு விடுதிகள், திரையரங்குகள், மதுபான சாலைகள் என்பனவற்றை திறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் வார இறுதி நாட்களில் அத்தியாவசிய தேவை தவிர ஏனைய அனைத்து செயற்பாடுகளுக்கும் தடை விதித்து, முழு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் கேரளா, மகாராஷ்ட்ரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொவிட்-19 பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது.
நாளாந்தம் தொற்றுறுதியாகின்றவர்களில் அதிகமானோர் மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த மாநிலங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் இந்திய சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.