நாட்டில் தெங்கு உற்பத்தியினை மேம்படுத்த நடவடிக்கை

Monday, 05 April 2021 - 10:05

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
தெங்கு உற்பத்தியினை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 250 கோடி முதல் 300 கோடி வரையிலான தேங்காய் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இதனை 360 கோடி வரையில் அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது

இலங்கையில் உற்பத்தியாகும் விவசாய நிலங்களில் 12 சதவீதமான பகுதியில் தெங்கு உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கமைய 4 லட்சத்து 9 ஆயிரத்து 244 ஹெக்டயர் பரப்பில் தெங்கு உற்பத்தி நாடளாவிய ரீதியாக இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் தேங்காய் ஒன்று தற்போது 120 விற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.