பாகிஸ்தானை 17 ஓட்டங்களால் வென்றது தென்னாபிரிக்கா

Monday, 05 April 2021 - 10:14

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+17+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஜொகன்னஸ்பர்க்கில் (Johannesburg) இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய தென்னாபிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 341 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

342 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் ஃபக்கார் சமான் (Fakhar Zaman) தெரிவு செய்யப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.