இந்தியாவில் முதற்தடவையாக நாளொன்றில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்றுறுதி

Monday, 05 April 2021 - 14:06

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
இந்தியாவில் முதற்தடவையாக நாளொன்றில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தியாவில் நேற்றைய தினம் மொத்தமாக ஒரு இலட்சத்து மூவாயிரத்து 558 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கிணங்க அங்கு தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 25 இலட்சத்து 89 ஆயிரத்து 67ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மேலும் 478 கொவிட் மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் பரவல் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

கொவிட்-19 பரவல், தற்காப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.