இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு தமது 88 வயதில் காலமானார்.
அவர், உடல் நல குறைவினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்தூரில் நேற்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தூரில் உள்ள அரச கல்லூரியின் ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய அவர், கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியிருந்தார்.
பின்னர், சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான இந்தியாவின் முதல் பெண் வர்ணனையாளராக செயற்பட்டார்.
அவர் கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் நிகழ்வுகளில் பங்குபற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது மறைவுக்கு கிரிக்கட் முக்கியஸ்த்தர்கள் பலரும் தங்களது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.