இந்தோனேஷியா - கிழக்கு திமோரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 100க்கும் மேற்பட்டோர் பலி!

Monday, 05 April 2021 - 18:52

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+-+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+100%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
இந்தோனேஷியா மற்றும் கிழக்கு திமோரில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

பருவ மழை தொடர்ந்தும் பெய்துவரும் நிலையில் வெள்ள நீர் மட்டம் உயர்வடைந்து செல்வதனால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

அணைக்கட்டுகள் நிரம்பி வழிவதுடன் ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு 40இற்கும் அதிகமானவர்கள் காணாமல் போய் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ தமது ஆழ்ந்த அனுதாபத்தை மரணித்தவர்களின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த ஜனவரி மாதம் ஜாவாவில் உள்ள சுமேதங் நகரத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 40 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.