வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்! (காணொளி)

Tuesday, 06 April 2021 - 10:12

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய், சைக்கிளில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். அதுபோல் சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். தற்போது நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார்.

விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.