யாழ் - சென்னை இடையிலான விமான சேவை மீள ஆரம்பம்?

Tuesday, 06 April 2021 - 10:47

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%3F
இடைநிறுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையேயான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சேவைகள் எதிர்வரும் சில மாத காலங்களில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிராந்திய மற்றும் சர்வதேச விமான சேவைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் யாழ்ப்பாண விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு தரம் உயர்த்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.