ரசிகரின் கைப்பேசியை பறித்த அஜித்: உண்மை காரணம் வெளியானது! (காணொளி)

Tuesday, 06 April 2021 - 11:11

%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%3A+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29

தன்னுடன் செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற ரசிகரின் கைப்பேசியை நடிகர் அஜித் பிடிங்கிய விவகாரம் தற்போது வைரலாகிவருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

அச்சந்தர்ப்பத்தில் ரசிகர் ஒருவர் அஜித்துடன் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். இதைப் பார்த்து கோபமடைந்த அஜித் அவரது கைப்பேசியை பிடிங்கிக் கொண்டார். இந்த காணொளி வைரலாகியுள்ளது.

இதேவேளை, வாக்குசாவடிக்கு கைப்பேசி எடுத்துவரக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனாலேயே தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற நபரின் கைப்பேசியை அஜித் பறித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் தேர்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்குமாறு குறித்த ரசிகரை அறிவுறுத்திய அஜித், அவரிடம் கைப்பேசியை திரும்ப ஒப்படைத்துள்ளதாக இந்திய ஊடகங்களின் பிந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகக்கவசம் அணியுமாறும் அந்த இளைஞனை அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான காணொளியும் தற்போது வைரலாகிவருவதுடன், அஜித்தின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.