தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இன்று காலை 7 மணிக்கு வாக்குபதிவுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இன்று பிற்பகல் ஒரு மணிவரையில் 39.61 சதவீத வாக்குபதிவுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இன்று முற்பகல் வாக்களித்தனர்.
சென்னை ஆழ்வார் போட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வாக்கினை செலுத்தியிருந்த நிலையில் , நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் தமது வாக்கினை பதிவு செய்திருந்தார்.
அதேநேரம், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, சிவகார்திகேயன், விவேக், ஷாலினி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் தமது வாக்கினை பதிவு செய்திருந்தனர்.
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 இலட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.