இளைய தளபதி சைக்கிளில் வாக்களிக்க சென்றமைக்கான காரணம் என்ன?

Tuesday, 06 April 2021 - 18:09

%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F+
நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது ஏன் என்று அவருடைய தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, எந்தவித சிக்கலுமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் தன்னுடைய வீட்டிலிருந்து சைக்கிளில் சென்று வாக்களித்தார்.

இது தொடர்பான காணொளி, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தான் மறைமுகமாக விஜய் சொல்கிறார் எனப் பலரும் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இதை முன்வைத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவைச் சேர்ந்த குஷ்பு உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சைக்கிளில் சென்று வாக்களித்ததை வைத்து அரசியல் ரீதியான கருத்துகள் பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து விஜயின் மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் விளக்கமளிக்கும் குரல்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: "விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தமைக்கு ஒரே ஒரு காரணம் தான். வாக்களிப்பு நிலையம் அவருடைய வீட்டிற்குப் பின்புறம் உள்ள தெருவில் இருக்கிறது.

அது ஒரு சிறிய தெரு என்பதால் காரில் சென்று வருவது இடையூறாக இருக்கும். ஆகையால் தான் அவர் சைக்கிளில் வந்தார். இதைத்தவிர வேறு எந்தவொரு காரணமும் கிடையாது" என அவர் தெரிவித்துள்ளார்