தமிழக சட்டமன்ற தேர்தல்: 71.79% வாக்குகள் பதிவு

Tuesday, 06 April 2021 - 20:22

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A+71.79%25+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
தமிழக சட்டமன்ற தேர்தலில் இன்று மாலை 7 மணிவரை 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவுகள் இன்று மாலையுடன் நிறைவடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் காரணமாக வாக்களிப்பின் போது பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் சராசரியாக 13 சதவீத வாக்குகள் அதிகரித்து வந்ததை அவதானிக்க முடிந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின், உதய நிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இன்று முற்பகல் வாக்களித்தனர்.

சென்னை ஆழ்வார் போட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாக்கினை செலுத்தியிருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் தமது வாக்கினை பதிவு செய்திருந்தார்.

அதேநேரம், நடிகர்களான அஜித்குமார், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விவேக் உள்ளிட்ட பலரும் தமது வாக்கினை பதிவு செய்திருந்தனர்.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 இலட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.