டோக்கியோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா பங்கேற்க மறுப்பு

Tuesday, 06 April 2021 - 20:39

%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமது நாடு பங்கேற்காது என வட கொரியா அறிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றிலிருந்து தமது வீரர்களை பாதுகாப்பதற்காக வடகொரியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இடம்பெறவிருந்த ஒலிம்பிக் போட்டி கொவிட்-19 பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் எதிர்வரும் ஜுலை 23ஆம் திகதி ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதிலிருந்து விலகுவதாக வட கொரியா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.