அவுஸ்திரேலியா - நியூசிலாந்துக்கு இடையில் தனிமைப்படுத்தல் இன்றி பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிப்பு

Tuesday, 06 April 2021 - 23:04

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+-+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து மக்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் இன்றி இருநாடுகளுக்கும் இடையே பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) இதனை அறிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளிலும் தற்போது கொவிட்-19 பரவல் மிகவும் குறைந்துள்ளமையால் இந்த தீர்மானத்தை நியூசிலாந்து பிரதமர் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீர்மானத்தினை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் (Scott Morrison) வரவேற்றுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் நியூசிலாந்து பயணிகள், அவுஸ்திரேலியாவின் சில மாநிலங்களுக்கு தனிமைப்படுத்தல் இன்றி பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.