தேயிலை மீள் பயிரிடல் மானியத் தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

Wednesday, 07 April 2021 - 8:27

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
தேயிலை மீள் பயிரிடல் மானியத் தொகை ஹெக்ரயர் ஒன்றுக்கு 4 இலட்சம் ரூபாவில் இருந்து 5 இலட்சம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் மொத்த தேயிலை உற்பத்தி 300 மில்லியன் கிலோ கிராமாக காணப்பட்டது.

அவற்றில் 75 வீதமான 225 மில்லியன் கிலோ கிராம் தேயிலை, சிறு தோட்ட உரிமையாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தேயிலை உற்பத்தியை உயர் மட்டத்தில் பேணுவதற்காக சிறிய தேயிலை தோட்டக்காணிகளில் உற்பத்திப்பெருக்கை அதிகரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

தேயிலையை மீள் பயிரிடல் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக 4 வருடங்கள் எடுப்பதாலும், அதற்கான செலவு அதிகமானதாலும் மீள் பயிரிடல் மற்றும் புதிய பயிரிடல் போன்றவற்றுக்கு போதுமான ஆர்வம் காட்டாமையால் 2025ஆம் ஆண்டளவில் 360 மில்லியன் கிலோ கிராம் உற்பத்தி இலக்கை அடைவதற்கான ஊக்குவிப்புக்கள் வழங்க வேண்டியுள்ளது.

அதற்கமைய தேயிலை மீள் பயிரிடல் மானியத் தொகை ஹெக்ரயர் ஒன்றுக்கு 4 லட்சம் ரூபாவில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை அதிகரிப்பதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.