பார்த்திபனை வாக்களிக்க விடாமல் தடுத்த கொவிட் தடுப்பூசி!

Wednesday, 07 April 2021 - 11:25

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%21
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்காதது ஏன் என்பது குறித்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேர்தலுக்கு முந்தைய நாள் ட்விட் செய்திருந்த பார்த்திபன், தேர்தலில் வாக்களிக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையால் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது.

டாக்டருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன். எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற ஒவ்வாமை ஏற்படும்.

அதுவும் எனக்கு ஏற்கனவே அலர்ஜி இருந்ததால் மட்டுமே இவ்வாறு ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்” என்று பதிவிட்டுள்ளார்.