நேற்று சைக்கிள் – இன்று விமானம்: ஜோர்ஜியா பறந்தார் தளபதி!

Wednesday, 07 April 2021 - 13:08

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D+%E2%80%93+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%21
‘தளபதி 65’ படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் ஜோர்ஜியா பயணமாகியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், நெல்சன் இயக்கும் படத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார்.

கடந்த வாரம் இப்படத்துக்கான பூஜை இடம்பெற்றிருந்த போதிலும் சட்டமன்ற தேர்தல் காரணமாக, படப்பிடிப்பு நடவடிக்கைகள் பிற்போடப்பட்டன. இதற்கிடையில் விஜய் வாக்களிக்க வந்த விதம், நேற்று முழுவதும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்நிலையில், நடிகர் விஜய் “தளபதி 65” படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்ஜியா சென்றுள்ளார். ஜோர்ஜியா செல்வதற்காக, அவர் விமான நிலையம் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடைபெறவுள்ளது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.