வட மாகாணத்தில் மேலும் 129 பேருக்கு கொவிட்

Thursday, 08 April 2021 - 9:38

%E0%AE%B5%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+129+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D
வட மாகாணத்தில் மேலும் 129 பேருக்கு இன்று கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 1003 மாதிரிகளின் பரிசோதனை முடிவிலேயே 129 பேருக்கு தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களில் நல்லூர், பாற்பண்ணை கிராமத்தை சேர்ந்த 88 பேரும், யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 26 பேரும், சாவகச்சேரி வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் 3 பேரும் அடங்குவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.