நாடாளுமன்ற உறுப்பினராகிறார் அஜித் மான்னப்பெரும!

Thursday, 08 April 2021 - 10:04

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%21
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்திற்காக அஜித் மான்னப்பெருமவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக அவரது பெயர் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் குறிப்பிட்டார்.

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, இன்றைய சபை அமர்வு ஆரம்பத்தின்போது, சபாநாயகர் விளக்கமளித்தார்.

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பில், சபையில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதுடன், எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள், கறுப்புப் பட்டியை அணிந்தவாறு சபையில் பிரசன்னமாகி இருந்ததாக நாடாளுமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதுடன், சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதையடுத்து, சபை நடவடிக்கைகள் முற்பகல் 10.35 அளவில், சபாநாயகரால் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டது.