சட்ட விரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 20 பேர் கைது

Thursday, 08 April 2021 - 12:12

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+20+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 4 முச்சக்கர வண்டிகள் சோதனையிடப்பட்டன.

அந்த முச்சக்கர வண்டிகளில் பயணித்த 20 பேரும் சட்ட விரோதமான முறையில்  கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல ஆயத்தமாக இருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுள் 14 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 2 பிள்ளைகளும் அடங்குவர்.

இவர்கள் மன்னார், வாழைச்சேனை, வத்தளை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர்.