நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் சமமான பயன்தரக்கூடிய தேசிய சுகாதார கட்டமைப்பொன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 43ஆவது வருடாந்த அமர்வில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். எனவே நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காண்பதற்காக வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார சேவைகள் நிபுணர்களை உள்ளடக்கிய அனைத்து சுகாதாரத் துறையை சார்ந்தவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது அவசியமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சிக்காக 17 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்தபோது கிராமப்புற மற்றும் தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக பார்வையிட முடிந்தது.
சுகாதார கட்டமைப்பில் பல்வேறு பலவீனங்களை அங்கு அடையளம் காணக்கூடியதாக இருந்தது.
கிராமிய மட்டத்தில் இந்நிலையை வெற்றி கொள்வதன் அவசியம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்வதற்கும் வைத்தியர்களின் உடனடி அவதானம் அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.