இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொவிட் 19 இரண்டாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
அவருக்கு கடந்த மார்ச் மாதம் 1ம் திகதி முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் குறித்த தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டாவது தடுப்பூசி செலுத்துகையின் பின்னர் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தடுப்பூசி பெறுவதற்கு தகுதி பெற்ற அனைவரும் அதனை செலுத்திக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,513 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, இந்தியாவில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 12,928,574 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் அங்கு கொவிட் 19 தொற்றால் ஒரு இலட்சத்து 66,892 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.