உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் தொடர் இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம்

Thursday, 08 April 2021 - 16:31

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D++%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
கொவிட் 19 தாக்கம் காரணமாக உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டித் தொடர் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாளாந்தம் அங்கு கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அதிகரித்து வருவதால் உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கட் தொடரை நடத்துவதில் பாதிப்பு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், திட்டமிட்டபடி இந்தியாவில் இந்த தொடரை நடத்துவதற்கு தாம் நடவடிக்கை எடுத்துவருவதாக சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.

அதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், வேறு நாட்டிற்கு இந்த தொடரை மாற்றுவதானால் அதற்கான யோசனைகளும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கட் பேரவை குறிப்பிட்டுள்ளது.