டென்மார்க்- பிரித்தானிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 4 பேர் இலங்கையில் கண்டுபிடிப்பு

Thursday, 08 April 2021 - 17:12

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
டென்மார்க்கில் பரவும் உரு திரிபடைந்த கொரோனா வைரஸ் தொற்றுறுதியான 3 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளரான காலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பெற்றுக்கொள்ளப்பட்ட 55 மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாதிரிகளில் 36 மாதிரிகள், இலங்கையில் பரவும் டீ - 1 411 வைரஸ் வகையை சேர்ந்தவையாகும்.

அத்துடன், அந்த மாதிரிகளில், பிரித்தானியாவில் பரவும் மற்றுமொரு உரு திரிபடைந்த வைரஸ் தொற்றுறுதியான நோயாளர் ஒருவரும் தனிமைப்படுத்தல் மையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேநேரம், முன்னதாக அடையாளம் காணப்பட்ட வேகமாக பரவும் பிரித்தானியாவின் உருதிரிபடைந்த வைரஸ் தொற்றுறுதியான 7 பேரும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவர்களில், 6 பேர் தனிமைப்படுத்தல் மையங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றுமொருவர் மீனவர் என்றும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்