மியன்மாரில் பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலி!

Thursday, 08 April 2021 - 20:19

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+11+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
மியன்மாரில் பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய தாக்குதலில் மேலும் 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக மியன்மாரின் வடமேற்கு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முற்பகல், குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் முன்னதாக 6 பாரவூர்தியில் பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாவும், இதனை அடுத்து மேலும் 5 பாரவூர்திகளில் பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

இதேநேரம், ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஒருவரும் அந்த நாட்டு இராணுவ ஆட்சியாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய இதுவரையில் 2 ஆயிரத்து 847 பேர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நூற்றுக்கணக்கானோரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.