ஜம்புரேவல சந்தரரதன தேரர் பிணையில் விடுதலை!

Thursday, 08 April 2021 - 20:26

%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%21
கொழும்பு - கோட்டையில் சட்டவிரோத ஒன்றுகூடல் தொடர்பில் கைதான, ஜம்புரேவல சந்ரரத்தன தேரர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை ஜீப் ரக வாகனத்தை தாக்கி, சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், சிங்களே அபி தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் ஜம்புரேவல சந்ரரத்தன தேரர் உள்ளிட்ட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்துக்கு அருகில், குறித்த தரப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், கோட்டை காவல்துறை நிலையத்துக்கு சொந்தமான ஜீப் ரக வாகனம் ஒன்று குறித்த இடத்தில் பயணித்துள்ளது.

கொரோனா சுகாதார ஒழுங்குவிதிகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டவாறு அந்த ஜீப் ரக வாகனம் பயணித்துள்ளது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரினால், காவல்துறை ஜீப் ரக வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த இடத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஜம்புரேவல சந்ரரத்தன தேரர் உள்ளிட்ட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஜம்புரேவல சந்ரரத்தன தேரர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.