பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிப்பதன் காரணமாகவே பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யப்பட்டது!

Thursday, 08 April 2021 - 21:22

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%21
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிப்பதன் காரணமாகவே, பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாம் எண்ணெய் பயன்பாட்டின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுகள், பெரும்பாலும் பிரதானமான பல நோய்களை உருவாக்குவதாக வைத்தியர்களினாலும், உணவு தொடர்பான விசேட நிபுணர்களினாலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

ஆனாலும், உரிய தரப்படுத்தப்பட்ட பாம் எண்ணெய் வகையைக் கொண்டு, பிஸ்கட், உணவுப் பண்டங்கள், ஒரு சில பாண் வகைகள் என்பன உற்பத்தி செய்யப்படுகின்றன.

1511.90.10 எனும் குறியீட்டைக் கொண்ட வகை அவ்வாறானதாகும்.

அது புலக்கத்தில் பாம் ஸ்ரியரின் என்று குறிப்பிடப்படும்.

குறித்த, உப உணவு உற்பத்திக்கு பயன்படுத்துவதற்காக, இந்த வகையை இறக்குமதி செய்வதற்கு எவ்வித தடைகளும் இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.