கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொவிட்

Thursday, 08 April 2021 - 22:43

%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D
இந்தியாவின் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி அவருக்கு முதலாம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதை அடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அவருக்கு நோய் அறிகுறிகள் எவையும் இல்லை என இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகளுக்கு அண்மையில் கொவிட்-19 தொற்றுறுதியானமை குறிப்பிடத்தக்கது.