சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சூர்யாவின் புதிய புகைப்படம்!

Friday, 09 April 2021 - 14:30

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.

இவரது நடிப்பில் வெளியான சூரரைபோற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 40ஆவது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிப்பதுடன், படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார் .

அத்துடன், இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சூர்யாவின் 40ஆவது படமான இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் சூர்யா வேட்டி, சட்டை அணிந்து கையில் வாளுடன் நின்றவாரு இருக்கிறார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.