நாடு முழுவதும் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்

Saturday, 10 April 2021 - 8:39

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கவனயீனமாக வாகனம் செலுத்துபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை தேடி இன்று (10) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றனர்.

எனவே நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இதனை கண்காணிப்பதற்காக சிவில் உடையிலும் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் வாகன விபத்துக்களை தடுப்பதற்காக 24 மணித்தியாலங்களும் காவல்துறையினர் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.