மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

Saturday, 10 April 2021 - 10:47

%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹர ஆகிய அலுவலகங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அலஹகோன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அன்றைய தினத்திற்கான நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களுக்கான சேவைகள் மாத்திரமே இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம், குருநாகல், கம்பஹா, அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை அலுவலகங்களில் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கான நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களுக்கான சேவைகள் இடம்பெறும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் சேவை பெறுநர்கள் 011 2 677 877 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமக்கான நேரத்தை ஒதுக்கி கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.