மியன்மாரில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 80 பேர் பலி!

Sunday, 11 April 2021 - 10:04

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+80+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
மியன்மாரின் பகோ நகரில் இராணுவத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 80 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பொதுமக்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு எதிராக அங்கு தொடர்ந்தும் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறித்த வன்முறைகளில் இதுவரை 600க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.