புத்தாண்டு காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் அபாயம்

Sunday, 11 April 2021 - 17:17

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
புத்தாண்டை முன்னிட்டு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்திகளின் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் கொடுக்கப்படும் மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இந்த முறை கொடுக்கப்படவில்லை என்று அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வழக்கமாக ஏப்ரல் 7 அல்லது 8 ஆம் திகதிகளில் அல்லது அதற்கு முன்னர் தாங்கி ஊர்திகளின் உரிமையாளர்களுக்கு மார்ச் மாத கொடுப்பனவுகளை செலுத்த இதற்கு முன்னர் காணப்பட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இருப்பினும், இந்த ஆண்டு இதுவரை இந்த கொடுப்பனவுகளை செலுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்கள் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.