பற்றிக் துணிகள்- கைத்தறி ஆடைகள் இறக்குமதியை இடைநிறுத்த ஆலோசனை

Sunday, 11 April 2021 - 20:10

%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88
இறக்குமதி செய்யப்படும் சகல பற்றிக் துணிகள் மற்றும் கைத்தறி ஆடைகளை இடைநிறுத்துவது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பற்றிக் துணிகள் மற்றும் கைத்தறி ஆடைகளால் உள்ளூர் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே அவற்றின் இறக்குமதியை இடைநிறுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனினும் ஏனைய ஆடைகளின் இறக்குமதியை இடைநிறுத்த ஆலோசிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சுமார் 11,000 பேர் பற்றிக் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த துறையினை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.