ரெம்டெசிவிர் தடுப்பூசி ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதிப்பு

Sunday, 11 April 2021 - 21:19

%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ரெம்டெசிவிர் (Remdesivir) எனப்படும் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய உடனடி தடைவிதித்துள்ளது.

இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

அங்கு நேற்றைய தினத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இந்த நிலையில் நோய் எதிர்ப்பு தடுப்பூசியான ரெம்டெசிவிர் (Remdesivir) தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொவிட்-19 பரவல் அதிகரித்தமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ரெம்டெசிவிர் (Remdesivir) தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு அவர்களிடம் உள்ள இருப்புகள் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.