ஒஸ்கார் விருதுகளை தொலைத்துவிட்டு மீண்டும் தேடிப் பெற்றேன்: ரஹ்மான் கூறிய பகீர் தகவல்

Monday, 12 April 2021 - 10:10

%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%3A+%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டொக் மில்லியனர் படத்திற்காக பின்னணி இசை மற்றும் ஜெய் ஹோ பாடலுக்கு என 2009 ஆண்டு இரண்டு ஒஸ்கார் விருதுகளை பெற்றார்.

இந்திய இசையை உலகளவில் புகழோங்க செய்தமைக்கான அடையாளமாக திகழும் இந்த ஒஸ்கார் விருதுகளை தான் தொலைத்து விட்டு, பிறகு மீண்டும் பெற்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

இந்த இரகசிய தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் இதனை கூறியிருந்தார். அதில் ஒஸ்கார் விருது எப்படி தொலைந்தது, பிறகு எவ்வாறு மீண்டும் கிடைத்தது என்ற கதையையும் விளக்கமாக கூறி உள்ளார்.

அதில் அவர் கூறுகையில், எனது அம்மா தான் ஒஸ்கார் விருதுகளை பத்திரமாக ஒரு துணியில் சுற்றி, அலுமாரி ஒன்றில் வைத்திருந்தார்.

நான் அதை வாங்கியது முதல் அது தங்கத்தால் செய்யப்பட்டது என்றே அவர் நினைத்திருந்தார். அம்மாவிடம் ஒப்படைத்த பிறகு பல ஆண்டுகள் அந்த விருதை பற்றி நான் நினைவில் கொள்ளவில்லை.

2020 டிசம்பரில் அம்மா கரீமா பேகம் காலமானார். அதனால் அம்மா வீட்டில் இருந்த ஒஸ்கார் விருதுகளை எனது வீட்டுக்கு எடுத்துவர நினைத்தேன்.

ஆனால் அம்மா எனது விருதை பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக நினைத்திருந்த அலுமாரியில் அவை இருக்கவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த நான், பல இடங்களில் தேடி பிறகு, கடைசியாக விருதுகளை தொலைத்து விட்டோம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

அப்போது எனது மகன் ஏ.ஆர்.அமீன், அந்த விருதுகள் வேறொரு அலுமாரியில் இருந்து தேடிக்கண்டுபிடித்து என்னிடம் கொண்டு வந்து கொடுத்தான் என்றார்.