சமுர்த்தி பயனாளிகளில் ஒரு தொகுதியினருக்கு 5000 ரூபா நிவாரணம் இன்று வழங்கப்பட்டது

Thursday, 15 April 2021 - 20:22

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+5000+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81
புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுநர்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு எதிர்வரும் திங்கட்கிழமை வரை வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினமும் ஒரு தொகுதியினருக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்த நிவாரண கொடுப்பனவானது இதுவரை 18 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சில பயனாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளமையால், அவர்களுக்கு இந்த நிவாரணக் கொடுப்பனவை வழங்க முடியாத நிலை உள்ளது.

எனினும், அவர்கள் மீள திரும்பியதன் பின்னர் இந்தக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பயனாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எந்த தினத்திலேனும் இந்தக் கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கு எந்தவொரு தடையும் இருக்காது அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இது குறித்து எவரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.