கதாநாயகனாக அறிமுகமாகும் அஸ்வின்: ‘குக் வித் கோமாளி’ பிரபலமும் இணைகிறார்

Friday, 16 April 2021 - 9:53

%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%3A++%E2%80%98%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E2%80%99+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2 ஆவது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்க ஷிவாங்கி ஒப்பந்தமான அதேவேளை பவித்ராவும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

அத்துடன், பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் புகழ் நடித்து வருகிறார். அந்தவகையில், தற்போது அஸ்வின் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரி இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஸ்வின் உடன் புகழும் இணைந்து நடிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் ஹரி கூறியதாவது: “இது முற்றிலும் காதலை மையமாக கொண்ட நகைச்சுவை திரைப்படம். கதைக்கு அஸ்வின் பொருத்தமாக இருந்ததால் தயாரிப்பாளர் அவரை பரிந்துரைத்தார்.

இப்படத்திற்கு பின் புகழ், நகைச்சுவையில் தனக்கான ஒரு இடத்தை பிடிப்பார். தற்போது நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

மே மாத இறுதியில் படப்பிடிப்பை துவங்கவுள்ளோம்” என்றார். முதன்முறையாக சினிமாவில் கதாநாயகனாக நடிக்க உள்ள அஸ்வின், எல்லாப் புகழும் இறைவனுக்கே என குறிப்பிட்டு ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.