புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 7.5 கோடி ரூபா வருமானம்!

Friday, 16 April 2021 - 14:19

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+7.5+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
புத்தாண்டு காலப்பகுதியில், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம், சுமார் 7 கோடியே 50 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம், 14ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் குறித்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பிரிவின் பதில் முகாமையாளர் நிஹால் லொட்ரிக் தெரிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் அதிவேக நெஞ்சாலைகளில், 263, 025 வாகனங்கள் பயணித்துள்ளன.

நேற்றைய நாளில் மாத்திரம் 112, 303 வாகனங்கள், அதிவேக நெஞ்சாலைகளில் பயணித்துள்ளன.

இதன்மூலம், 3 கோடியே 36 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பிரிவின் பதில் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.