முரளியின் உடல்நலம் குறித்து வெளியான தகவல்

Monday, 19 April 2021 - 8:30

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு குருதி குழாய் சீரமைப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள வைத்தியசாலையில் அவருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு குருதிக்குழாய் அடைப்பு ஏற்பட்டமை கடந்த மார்ச் மாத இறுதியில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் முன்னர் திட்டமிட்ட வகையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இடம்பெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அவர் சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணியில் ஆலோசனை அதிகாரியாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.