மூத்த சகோதரியை பொல்லால் தாக்கிக் கொலை செய்த சகோதரன்!

Monday, 19 April 2021 - 11:32

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%21
நுரைச்சோலை - ஆலங்குடா பிரதேசத்தில் தனது மூத்த சகோதரியை கொலை செய்த சகோதரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம்  இன்று (19) இடம்பெற்றுள்ளது.

விசேட தேவையுடையவரான 43 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி வீட்டிற்கு தாமதமாக வந்த சந்தேக நபரை அவரது தாய் கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அவர் உறங்கிக் கொண்டிருந்த சகோதரியை பொல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

தப்பியோடிய சந்தேகநபரை பிரதேசவாசிகள் பிடித்து நுரைச்சோலை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுரைச்சோலை காவல்நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.