புதுடெல்லியில் ஒரு வாரத்திற்கு முடக்க நிலை அறிவிப்பு!

Monday, 19 April 2021 - 13:13

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
கொவிட்-19 தீவிரம் காரணமாக இந்தியாவின் டெல்லி நகரம் இன்று முதல் ஒருவாரத்திற்கு முடக்கப்படவுள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை டெல்லி நகரம் முடக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் தீவிரத்தை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது டெல்லி நகரம் முடக்கப்படாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்லியில் நாள் ஒன்றில் அடையாளங்காணப்பட்ட அதிகளவான கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளனர்.

அந்த நகரத்தில் நேற்றைய தினம் 25,462 பேருக்கு தொற்றுறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.