ஹக்கலையில் ஏற்பட்ட விபத்தையடுத்து மக்கள் பெரும் ஆர்ப்பாட்டம்!

Monday, 19 April 2021 - 16:38

%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இன்று(19) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தொிவித்தார். நுவரெலியா திசையிலிருந்து சென்ற மகிழுந்து ஒன்று, வீதியால் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் இருவரை மோதியுள்ளது. 

இதனையடுத்து, மகிழுந்தை வீதியில் கைவிட்டு அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தொிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா காவல்நிலையத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, விபத்தையடுத்து, அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடியதுடன், விபத்து இடம்பெற்ற இடத்தில் ஏற்படும் தொடர் விபத்துகளுக்கு தீர்வாக வேகத்தடையை ஏற்படுத்தி தருமாறுகோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் எமது செய்திதொடர்பாளர் தொிவித்தார்.