செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக உலங்குவானூர்தியை செலுத்தியது நாசா!

Monday, 19 April 2021 - 18:01

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%21
செவ்வாய் கிரகத்தின் மீது சிறிய ரக உலங்குவானூர்தி ஒன்றை இன்றைய தினம் வெற்றிகரமாக பறக்கவிட்டுள்ளதாக நாசா  தெரிவித்துள்ளது.

வேற்றுகிரகம் ஒன்றில் முதல் முறையாக உலங்குவானூர்தி செலுத்தப்பட்ட சந்தர்ப்பமாக இந்நிகழ்வு வரலாற்றில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்ஜெனுயிட்டி (Ingenuity) என பெயரிடப்பட்டுள்ள இந்த உலங்குவானூர்தி,  ஒரு ட்ரோனை போன்ற தோற்றத்தை கொண்டதாகும்.

இந்த உலங்குவானூர்தி  வெற்றிகரமாக செலுத்தப்பட்டமை, செவ்வாய் கிரகத்துக்கு மேலாகவுள்ள செயற்கை கோள் ஒன்றினால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக நாசா தொிவித்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த வருடம் ஜுலை 30ஆம் திகதி  பெர்செவரன் (Perseverance) என்ற விண்கலத்தை (ரோவர்) செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

இந்த விண்கலம் சுமார் ஏழு மாத பயணத்தின் பின்னர் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்த ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தில், ‘இன்ஜெனுயிட்டி’ என்ற உலங்குவானூர்தியும் (ஹெலிகொப்டர்) இணைக்கப்பட்டிருந்தது. இந்த இன்ஜெனுயிட்டி வானூர்தியை முதலில் ஏப்ரல் 11 ஆம் திகதி இயக்க நாசா திட்டமிட்டிருந்தது.

எனினும், மென்பொருள் தொடர்பான சிக்கலால் முயற்சி பிற்போடப்பட்டது. இந்தநிலையில் தற்போது செவ்வாய்க் கிரகத்தில் இன்றைய தினம் ‘இன்ஜெனுயிட்டி’ வானூர்தி வெற்றிகரமாக பறந்ததாக நாசா அறிவித்துள்ளது.