இயற்கையை பாதுகாக்க உதவ தயார் - சஜித்

Monday, 19 April 2021 - 21:38

%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+
நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சர்களுக்கு உதவ தயாராகவுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

யால பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காட்டு யானை விடயம் தற்போது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

எந்தவொரு அரசாங்கத்திற்கும் இதற்கான தீர்வை பெற்று தரமுடியாமல் போயுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலும் முழுமையான தீர்வொன்றை வழங்கமுடியாமல் போனது.

இந்த விடயத்துடன் தொடர்புடைய மூன்று அமைச்சுகளுடனும் கைக்கோர்த்து எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் சுற்றாடல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சகல உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.