'தளபதி 65' படத்தில் இணைகிறார் சிவகார்த்திகேயன்!

Tuesday, 20 April 2021 - 12:30

%27%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+65%27+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%21
இளைய தளபதி விஜய் தற்போது பெயரிடப்படாத தளபதி 65 திரைப்படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர் நெல்சன்  இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஜோர்ஜியாவில் இடம்பெற்றுவருகின்றன.

இப்படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துவரும் அதேவேளை, அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், தளபதி 65 திரைப்படத்துக்கு பாடலொன்றை எழுதுவதற்கு சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இயக்குநர் நெல்சனின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.

அத்துடன் நம்ம வீட்டுப் பிள்ளை, கூர்கா மற்றும் ஆதித்யா வர்மா உள்ளிட்ட படங்களிலும் சிவகார்த்திகேயன் பாடல்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.